சனி, 14 ஜனவரி, 2012

டெல்லியில் 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானிகள் 12 பேர் ஒரே சமயத்தில் இன்று விடுப்பு எடுத்தால், இதுவரை 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லியில் இருந்து சென்னை பெங்களூரு, நாக்பூர், அஹமதாபாத்துக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அமிர்தசரஸ், கொல்கொத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகளை இன்று பிற்பகலில் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்க ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இன்று போகிப் பண்டிகையையொட்டி காலை சென்னையில் கடும் புகை மூட்டம் நிலவியது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில், விமான போக்குவரத்தும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக