வெள்ளி, 27 ஜனவரி, 2012

ஜெ. அதிரடி : அமைச்சர் இலாகாக்கள் மாற்றம் - 2 அமைச்சர்கள் நீக்கம்

தமிழக அமைச்சரவையை மீண்டும் மாற்றி அமைத்தார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சர் இலாகாக்களையும் மாற்றி அமைத்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள் அகிரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோரை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நல அமைச்சராகிறார் என்.ஆர்.சிவபதி. முசிறி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிவபதி.
முக்கூர் சுப்பிரமணியத்துக்கு தகவல் தொழில் நுட்பத்துறை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். செய்யாறு சட்ப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றவர் முக்கூர் சுப்பிரமணியம்.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை பொறுப்பை அளித்துள்ளார்.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக