புதன், 4 ஜனவரி, 2012

கமல்:பணம் முக்கியம் என்று நினைத்திருந்தால் 25 வருடத்துக்கு முன்பே ரிடையர் ஆகியிருப்பேன்!

பணம் மட்டுமே முக்கியம் என்று நினைத்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடிப்புத் துறையிலிருந்து விலகிவிட்டிருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் மனப்பூர்வமான திருப்தியும் கிடைக்கிறது," என்று நடிகர் கமல்ஹாஸன் கூறினார்.
'விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடிக்கும் கமல், படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். பாதிப் படம் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.
பூஜா குமார், ஆன்ட்ரியா நாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தப் படம் 2012-ன் சிறப்புத் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கமல்ஹாஸன் அளித்த பேட்டியில், "விஸ்வரூபம் படம் தமிழ், இந்தியில் நேரடி படமாக தயாராகிறது. இப்படத்தில் நடிக்க நானும் சோனாக்ஷி சின்ஹாவும் தேதி ஒதுக்கி இருந்தோம். ஆனால் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்கவில்லை.

எங்கள் கால்ஷீட் வீணானது. எனக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. அதனால்தான் பிறந்தநாளை கூட கொண்டாடுவது இல்லை. எனவேதான் நானே படத்தை இயக்குகிறேன்.

இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. தசாவதாரம், ஹேராம் போன்ற எனது படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டன. ஆனால் இந்தி வசன உச்சரிப்புகள் அவற்றில் சரியாக பொருந்தவில்லை. எனவேதான் 'விஸ்வரூபம்' படத்தை இரு மொழிகளிலும் நேரடியாக எடுக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகின்றன.

இன்னும் நடிப்பில் சலிப்பு வரவில்லையா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.

பணம், புகழுக்காக நடிக்க வந்திருந்தால் 25 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது. அந்த திருப்தி வேறு எதிலும் இல்லை. அதனாலதான் நான் தொடர்ந்து சினிமாவில் இருக்கிறேன். என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக