செவ்வாய், 10 ஜனவரி, 2012

புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா- கண்டித்து மே 17 ஆர்ப்பாட்டம்

சென்னை புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா பத்திரிக்கையின் ஸ்டால்இடம் பெற்றிருப்பதைக் கண்டித்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த ஸ்டாலை ஸ்கிரீனைப் போட்டு மூடினர்.
சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் பல்வறு பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை வைத்துள்ளன. முல்லைப் பெரியாறு பிரச்சினையை முதல் முறையாக பெரிதாக்கி வெடிக்க வைத்த பெருமையைக் கொண்ட மலையாள மனோரமா நாளிதழும் தனது ஸ்டாலை இங்கு போட்டுள்ளது.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த மே 17 இயக்க அமைப்பினர் நேற்று அங்கு வந்து ஸ்டால் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தென்னிந்திய புத்தக வியாபாரிகள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு நடத்தினர்.

அப்போது, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பெரிதாக்கி அதில் விஷமத்தைக் கலந்தது மலையாள மனோரமா நாளிதழ்தான். முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் விட மறுக்கும் கேரளத்தைச் சேர்ந்த நாளிதழுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டனர். இதையடுத்து ஸ்டாலை மூடி விடுவதாக புத்தக பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இதையடுத்து மலையாள மனோரமா ஸ்டாலில் இருந்தவர்களுடன் பேசிய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கத்தினர் ஸ்டாலை மூடி விடுமாறு கூறினர். ஆனால் அப்போது உள்ளே புகுந்த சில தமிழ்ப் பதிப்பாளர்கள் அது சரியாக இருக்காது, தொடர்ந்து ஸ்டால் நடத்தட்டும் என்று பஞ்சாயத்துப் பேசினர்.

இதையடுத்து மலையாள மனோரமா என்ற பெயரைப் பயன்படுத்தாமல் உங்களது இன்னொரு பதிப்பான தி வீக் இதழின் பெயரை பயன்படுத்தி தொடர்ந்து ஸ்டாலை நடத்துங்கள் என்று கூறி விட்டது சங்கம்.

இதனால் மலையாள மனோரமா இதழ் தனது ஸ்டாலில் தொடர்ந்து இயங்கி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக