புதன், 7 டிசம்பர், 2011

TOP கியரில் கனிமொழி DMK பவர் பாலிட்டிக்ஸ்

கனிமொழி கட்சிக்குள் டாப்-கியரில் வேகம் எடுக்க, சில ரகசிய ஏற்பாடுகள்!

ViruvirupuDelhi, India: DMK MP Kanimozhi refuted rumours that she would distance herself from party work to avoid embarrassment to the leadership.“I will continue the political career as my father has brought me to this field. DMK and me will together face the 2G case and will decide about the party posting later,” she said. Party sources said this statement is an indirect attack on M.K.Stalin.
தி.மு.க.-வுக்குள் கனிமொழி தரப்பு டாப் கியரில் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கட்சிக்குள் கனிமொழிக்கு உள்ள ஆதரவு, கனிமொழி எதிர்ப்பாளர்களுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருப்பதுதான், வித்தியாசமான காட்சி.
கனிமொழிக்கு கடந்த வார இறுதியில் சென்னையில் கிடைத்த வரவேற்போடு, சூட்டோடு சூடாக முயற்சிகள் செய்தால்தான் கட்சிக்குள் முக்கிய இடம் ஒன்றைப் பிடிக்க முடியும் என்று நன்றாகவே உணர்ந்துள்ளனர் அவர்கள். தி.மு.க.-வில் உள்ள ஸ்டாலின் ஆதரவு ஆட்களே, கனிமொழியை வரவேற்க ஏர்ப்போர்ட்டுக்கு வந்த கூட்டம், ‘ஆட்சேர்ப்பு’ முறையில் வந்த கூட்டமல்ல என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தவரை, ஸ்டாலின் தரப்பினர் இரு விஷயங்களில் படு சீரியஸாக இருந்திருக்கின்றனர்.
ஒன்று, சந்தடி சாக்கில் கனிமொழிக்கு கட்சிப் பதவி ஏதும் கிடைத்துவிடக் கூடாது. இரண்டாவது, அறிவாலயத்தில் வைத்து கனிமொழியின் வரவேற்பு நிகழ்வுகள் ஏதும் நடைபெறக் கூடாது.
அந்த வகையில் அவர்களுக்கு கிடைத்திருப்பது வெற்றியே. ஆனால், அவர்கள் எதிர்பாராத விஷயம், கட்சிப் பிரமுகர்களில் கிட்டத்தட்ட அனைவருமே கனிமொழியை வரவேற்க வந்ததுதான். கட்சி வி.ஐ.பி.-களில் வீரபாண்டி அறுமுகம்தான் மிஸ்ஸிங். அவர் வராததற்கு வேறு காரணங்கள் சொல்கிறார்கள்.
அடுத்துவரும் சில வாரங்களுக்கு ஸ்டாலின் நில அபகரிப்பு வழக்கில் பிசியாக இருக்க வேண்டியிருக்கும் என்ற ஊகம், தி.மு.க.-வுக்கு உள்ளேயே உள்ளது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கனிமொழிக்கு செல்வாக்கு தேடுவதற்கு சில திட்டங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு அமையவே, “நான் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன்” என்று கனிமொழி வெளிப்படையாகத் தெரிவித்ததாக சொல்கிறார்கள்.
2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியுள்ளதால், கனிமொழியால் கட்சிக்கு தர்மசங்கடம் என்ற கருத்து ஒன்று தி.மு.க.-வினரிடையே பரப்பப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டு, அந்தக் காரணத்துக்காக அரசியலில் இருந்து ஒதுங்கும் யோசனை ஏதும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இவை எல்லாமே ஸ்டாலின் தரப்புக்கு கொடுக்கப்படும் அடிகள் என்பது, வெளிப்படையாகவே தெரிகின்றது!
வழக்கு விசாரணைக்காக கனிமொழி டில்லியில் தங்கியிருக்க வேண்டிய நாட்கள் அதிகம் என்றாலும், அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம், சிறிதும் பெரிதுமான விழாக்களில் கலந்துகொள்ள வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தெரிகின்றது.
சென்னையில் மட்டுமின்றி, சென்னைக்கு வெளியேயுள்ள மாவட்டங்களிலும், சில விழா ஏற்பாடுகளைச் செய்யுமாறு சி.ஐ.டி. காலனியில் இருந்து ஆதரவாளர்களுக்கு உத்தரவு சென்றிருப்பதாக தெரிகின்றது.
ஆரம்பத்தில், அரசியல் விழாக்கள் போல இல்லாமல் இலக்கிய விழாக்கள் போல ஏற்பாடு செய்யுமாறும், அந்த விழாக்களுக்கு வரும்போது, தொண்டர்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறும் கேட்கப்பட்டுள்ளதாம். இன்றைய தேதியில் கனிமொழிக்கு ஆதரவாக சென்னையைச் சுற்றியுள்ள 3 மாவட்டங்களின் செயலாளர்கள் இதற்கு முழுச் சம்மதம் கொடுத்திருப்பதாகவும் தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
மற்றைய மாவட்டச் செயலாளர்களில் கனிமொழிக்கு எதிராக கடும்போக்குடன் இல்லாத (அல்லது கடுமையான ஸ்டாலின் ஆதரவாளர்களாக இல்லாத) சிலருடன் பேசிக்கொண்டு இருப்பதாகவும் தெரியவருகின்றது. அடுத்தடுத்த வாரங்களில் தி.மு.க.-வுக்குள் இந்த பவர் பாலிட்டிக்ஸ் பெரியளவில் இருக்கப் போகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக