செவ்வாய், 6 டிசம்பர், 2011

Ragging நான்கு மானவிகள் தற்கொலை முயற்சி

மாணவர்களுடன் இணைத்து கிண்டல்:
அவமானமடைந்த நான்கு மானவிகள் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கொலமங்கலம் செல்லும் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் உயர் நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சாந்தினி, ரம்யா, திவ்யா, லட்சுமி ஆகிய நால்வரும் வகுப்பு தோழிகள்.
இந்த நால்வரும் நேற்று மதிய சாப்பாட்டு நேரத்தில் தாங்கள் கொண்டுவந்த சாப்பாட்டில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு வந்த நால்வரும் கொஞ்ச நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர்.

பயந்துபோன பள்ளி நிர்வாகம் மாணவிகள் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு, உடனடியாக போலீசில் புகார் செய்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவிகள் நால்வரிடமும் விசாரணை செய்த காவல்துறை ஆய்வாளர் கதிர்வேலிடம், தாங்கள் பள்ளியில் படிக்கும் சில மாணவிகள் தங்களையும், தங்களுடன் படிக்கும் ஒரு சில சக மாணவர்களையும் இணைத்து இவர்கள் காதல் செய்வதாக பேசி கிண்டல் செய்தனர் என்றும், இந்த அவமானம் தாங்காமல்தான் தாங்கள் நால்வரும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தெரிவித்தனர்.
நன்றாக படிப்பவர்களையும், இப்படிப்பட்ட சில மாணவிகள் கெடுத்து விடுகிறார்கள். தொலைக்காட்சி தொடர்களில் மட்டும்தான் பெண் வில்லிகள் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள், இப்படி பள்ளிக்கூடத்திலும் மாணவிகளாகவும் இருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக