செவ்வாய், 6 டிசம்பர், 2011

கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் நிறுத்தம்:

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதால், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எல்லைப்பகுதியான கூடலூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐயப்ப சீசன் என்பதால் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு கூடலூரில், பொதுமக்கள் சார்பில் சுந்தர வேலவர் கோயிலில் அன்னதானம் நடக்கிறது. வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இடுக்கியில் 144 தடை உத்தரவையும் மீறி, தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வண்டிப்பெரியாறு அருகே கோவை மற்றும் பழனியைச் சேர்ந்த வாகனங்கள் கல் வீசி தாக்கப்பட்டுள்ளன. நிலக்கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக வாகனங்களும் தாக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக