சனி, 17 டிசம்பர், 2011

Hotel Saravanabhavan ராஜகோபாலுக்குப் புதுச் சிக்கல் வந்துள்ளது

Rajagopal
சென்னை பிரபல சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்குப் புதுச் சிக்கல் வந்துள்ளது. அவர் மீது ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றவர் ராஜகோபால். ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்டு கொடைக்கானல் மலையில் அவரது பிணத்தைப் போட்டு விட்டனர். இந்த வழக்கில் சிக்கி கைதானார் ராஜகோபால்.

இந்த நிலையில் தற்போது ராஜகோபாலுக்குப் புதுச் சிக்கல் வந்துள்ளது. சரோஜா என்ற பெண் ராஜகோபால் மீது போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்குச் சொந்தமான நிலம் வடபழனி அருகே உள்ளது. இது 4 கிரவுண்ட பரப்பளவிலானது. இதன் மதிப்பு ரூ.10 கோடியாகும். இந்த நிலத்தை ராஜகோபால் அபகரித்து விட்டார். அவரிடமிருந்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று சரோஜா கோரியுள்ளார்.

இதுகுறித்துப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக