வெள்ளி, 23 டிசம்பர், 2011

Gujarat 23 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் கிருமி இருந்த ரத்தத்தை ஏற்றிய மருத்துவர்கள்

குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் 23 குழந்தைகளுக்கு ரத்த மாற்று சிகிச்சையின் போது எய்ட்ஸ் கிருமி பாய்ந்த ரத்தம் ஏற்றப்பட்டதாக ஆர்பாட்டம் வெடித்ததையடுத்து வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அக்குழந்தைகளின் உடல்நிலை 6 மாத காலமாக சரியின்றி இருந்தது. இதனால் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத் மாநில ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தனர். தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா வழக்கை விசாரித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் இந்த ஆஸ்பத்திரியில் 100 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 23 குழந்தைகளுக்கு ரத்தம் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகம் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சோதனைக் கூடத்தில் இருந்து ரத்தம் பெற்று குழந்தைகளுக்கு செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில் ரத்தம் வழங்கிய ரத்த வங்கியின் லைசென்ஸ்சை ரத்து செய்யவேண்டும் என்று கூறினார். அரசு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே சம்பவம் நடந்த ஜுனாகத் நகரில் முதல்-மந்திரி நரேந்திரமோடி நேற்று மதநல்லிணக்க உண்ணாவிரதம் இருந்தார். அவரை கண்டித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காங்கிரசாருடன் சேர்ந்து போட்டி உண்ணாவிரதம் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக