வெள்ளி, 23 டிசம்பர், 2011

கோயில் businessஇல் பணத்தை முதலீடு செய்யும் நடிகர் அர்ஜுன்

Arjun
28 அடிய உயர ஆஞ்சநேயர் சிலையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டி வருகிறார் நடிகர் அர்ஜுன்.
சென்னை அருகே கெருகம்பாக்கம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஞ்சநேயர் கோயில் கட்டும் பணியை அர்ஜுன் தொடங்கியது நினைவிருக்கலாம்.
20 ஏக்கர் பரப்பளவு உள்ள அவரது சொந்த தோட்டத்தில், இந்தக் கோயிலைக் கட்டி வருகிறார். முதலீடு செய்யும் பணத்திற்கு மிக நிச்சயமான இலாபம் தரக்கூடிய ஒரே பிசினெஸ் கோவிலும் இதர மத சம்பந்தமான நிறுவனங்களுமே என்பது தெரிந்ததே.
பெங்களூர் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 200 டன் உள்ள ஒரே கல்லில், ஆஞ்சநேயர் சிலை உருவானது. 28 அடி உயரம், 17 அடி அகலம், 9 அடி கனத்தில், ஆஞ்சநேயர் உட்கார்ந்திருப்பது போல் அந்த சிலை உருவாக்கப்பட்டது.
22 சக்கரங்களை கொண்ட ராட்சத டிரக் மூலம் ஆஞ்சநேயர் சிலை பெங்களூரில் இருந்து கெருகம்பாக்கத்துக்கு எடுத்து வரப்பட்டது.

ஜனவரி முதல் வாரத்தில், அந்த சிலை பிரமாண்ட கிரேன் மூலம் சாமி பீடத்தில் அமர்த்தப்படுகிறது. இதற்கான விசேஷ பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார் அர்ஜுன்.
இந்தக் கோயில் குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில், "உலகிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவிலாக இதுதான். கோவிலின் உள் பிரகாரம், வெளிபிரகாரம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணி முடியும்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக