வெள்ளி, 9 டிசம்பர், 2011

குழந்தைகளை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற தலைமை ஆசிரியை



நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அருகில் உள்ள மொளசி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 26 குழந்தைகள் படித்து வருகிரார்கள். இந்த பள்ளியில் மல்லிகா (வயது 40) தலைமையாசிரியராகவும், பூங்கொடி (வயது 32) என்பவர் ஆதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று வியாழன் அன்று பூங்கொடி பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். அதனால் தலைமை ஆசிரியை மல்லிகா மட்டுமே பள்ளியை கவனித்து வந்துள்ளார். மலையில், தன்னுடைய இரு சக்கரவாகனத்தின் சாவியை காணாத மல்லிகா மாணவ மாணவியர்களை கூப்பிட்டு சாவிய எடுத்தீர்களா..? விசாரித்துள்ளார். ஆனால், குழந்தைகள் யாரும் தாங்கள் சாவிய பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.இதனால், மாணவர்கள் மீது எரிச்சல் கொண்ட மல்லிகா எல்லா மாணவ, மாணவியர்களையும் பள்ளியின் வகுப்பறையில் வைத்து பூட்டு போட்டு விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று தனது வாகனத்துக்கான மாற்று சாவியை எடுத்து வர போய்விட்டார்.

தலைமை ஆசிரியை கோபமாக இருந்ததையும், இப்போது பூட்டிவிட்டு சென்றுள்ளதையும் பார்த்த குழந்தைகள் என்னவென்று புரியாமல் ஒன்றிண் பின் ஒன்றாக எல்லா குழந்தைகளும் அழுக ஆரம்பித்துவிட்டனர்.
மாணவிகள் அழும் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் சிலர் பூட்டிய பள்ளிக்குள் குழந்தைகள் இருப்பதை பார்த்து விட்டு அருகில் உள்ள மொளசி காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லியுள்ளனர். போலீசார் பள்ளிக்கு வந்து பூட்டை உடைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது, தலைமை ஆசிரியை அங்கு வந்து விட்டார். பின்னர் அவர் கையிலிருந்த சாவிய கொண்டு வகுப்பறையை திறந்து விட்டுள்ளார்.
அந்த நேரம் பள்ளிக்கூடத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் மல்லிகாவை தாக்க முயன்றதால் கொஞ்சநேரம் பரபரப்பு ஏற்பட்டது, பள்ளிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஒரு மாணவியின் தந்தையார் கொடுத்த புகாரின் பேரில் மொளசி போலீசார் தளமை ஆசிரியை மல்லிகா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக