வியாழன், 15 டிசம்பர், 2011

இந்தியாவிலுள்ள ‘விசா’ ஆலயத்தில், அமெரிக்க டாலருக்கு விசேட பூஜை!

Viruvirupu,

Hyderabad, India: Known as the visa temple, the Chilkur Balaji temple, about 35 km west of Hyderabad, has a large following of people for whom the rise and fall in the value of the dollar matters a great deal. The temple yesterday (Wednesday) launched a special daylong prayer to alleviate the dollar crunch and in the process arrest the fall of the rupee vis-à-vis the US currency.

“ஸ்ரீ ந்ருசிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணா முக்தாயே..” என்ற மந்திரம் ஹைதராபாத்துக்கு அருகேயுள்ள (அமெரிக்க) விசா ஆலயத்தில் 11 தடவைகள் உச்சரிக்கப்பட்டு, அமெரிக்க டாலருக்கு சிறப்பு பூஜை நேற்று (புதன்கிழமை) நடாத்தப்பட்டுள்ளது. உலக பொருளாதார பின்னடைவு காரணமாக, அமெரிக்க டாலர்-இந்திய ரூபா கரன்சி எக்ஸ்சேஞ்ச் ரேட் கீழே போகாமல் இருக்க நடாத்தப்படும் பூஜை இது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
விசா ஆலயத்தில் பக்தர்கள்!
ஹைதராபாத் நகரிலிருந்து மேற்கே 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சில்கூர் பாலாஜி ஆலயம்.
‘அமெரிக்க விசா ஆலயம்’ என்ற பெயரில் அறியப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால், விரைவில் அமெரிக்க விசா கிட்டும் என்ற நம்பிக்கை இருப்பதால், விசா ஆலயத்தில் ஜேஜே என்று எப்போதும் கூட்டம்.
(ஆலயத்துக்கும் அமெரிக்க தூதரகத்துக்கும் இடையே எந்த டீலும் கிடையாது)
தற்போது உலக பொருளாதாரம் பின்னடைவு நிலையில் இருப்பதால், விசா எடுத்து அமெரிக்கா செல்ல விரும்பும் பக்தர்கள் அமெரிக்க டாலர் தொடர்பாக கவலையுற்று உள்ளார்கள் என்ற காரணத்தால் நேற்று, முழுநாள் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலயத்தின் பிரதான அர்ச்சகர் எம்.வி.சௌந்தர்ராஜன், “அமெரிக்க டாலரை ஆபத்திலிருந்து காப்பாற்ற ‘ருணா விமோசன ந்ருசிம்ஹ ஸ்தோத்ரம்’ என்ற மந்திரத்தை எச்சரிக்க வேண்டும்” என்று அறிவிப்பு செய்திருந்ததால் ஏராளமான விசா பக்தர்கள் பூஜை செய்து டாலரைக் காப்பாற்ற சமூகமளித்திருந்தனர்.
விசா ஆலயத்தின் மற்றொரு அர்ச்சகர் ரங்கராஜன், “அமெரிக்காவின் புகழ்பெற்ற பைனான்சியல் பத்திரிகை ‘தி வால்ஸ்ட்ரீட் ஜேர்னல்’, 2007-ம் ஆண்டு டிசெம்பர் 31-ம் தேதி எமது ஆலயம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்தளவுக்கு எமது விசா ஆலயம் அமெரிக்காவுடன் நெருக்கமானது” என்று தெரிவிக்கிறார்.
தெலுங்கானாவில் அமைந்துள்ள இந்த அமெரிக்க விசா ஆலயம்தான், மாநிலத்திலேயே பக்தர்களிடம் பணம் வாங்காத ஒரேயொரு ஆலயம் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆலயத்தில் வழிபாடு செய்து அமெரிக்க விசா கிடைக்கப் பெற்றவர்களின் பட்டியல், ஆலய நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக அமெரிக்க உளவு விமானங்கள் அடிக்கடி கீழே விழும் விஷயத்தை ஆலய நிர்வாகம் அறியவில்லை போலிருக்கின்றது. அறிந்திருந்தால் அமெரிக்க உளவு விமானங்களின் ஷேமத்துக்கு ஹோமம் ஒன்று செய்திருக்கலாம்! “US Spy Drone Vimochana Nrusimha Stotram”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக