ஞாயிறு, 18 டிசம்பர், 2011

கேரளாவிலிருந்து அழகான பெண்கள் மட்டும்தானா, தண்ணீர் கிடையாதா?''



சென்னையில் நடந்த வேட்டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெகன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனால் விழாவுக்கு வந்திருந்த மலையாள நடிகர், நடிகைகள் நெளியும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு நிலைமையின் இறுக்கத்தை தளர்த்தினார்.

மாதவன் நடிக்க, சமீரா ரெட்டி நாயகியாக நடிக்க, லிங்குசாமி இயக்க உருவாகியுள்ள படம் வேட்டை. இப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆர்யா, அமலா பால் ஆகியோரும் ஜோடி போட்டு நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியை நடிகர் ஜெகன் - ரம்யா (இருவரும் விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள். ஜெகன் பல படங்களில் ஹீரோவுக்கு தோழனாக நடித்துள்ளார்.) இருவரும் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஜெகன், அமலா பாலைப் பார்த்து, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழகான பெண்களை கொடுக்கிறீர்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கேட்டால் மட்டும் கொடுக்க மாட்டேன்கிறீர்களே? என்று டைமிங்காக வாரினார்.

இதைக் கேட்டு சற்றே திடுக்கிட்டார் அமலா பால். பின்னர் சுதாரித்துக் கொண்டு, இது பிரஸ் மீட் இல்லையே, ஆடியோ நிகழ்ச்சிதானே என்று கேட்டார். நிகழ்ச்சி ரூட் மாறுவதைக் கவனித்த ஆர்யா, டக்கென மேடைக்குத் தாவி வேறு பேச்சைப் பேசி நிலைமையை மாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக