புதன், 21 டிசம்பர், 2011

லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ வந்தால் சிதம்பரம் சிறைக்கு போக வேண்டும்: அன்னா

ராலேகான் சித்தி: சிபிஐ மட்டும் லோக்பால் வரம்பிற்குள் வந்தால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்னா தனது சொந்த ஊரான ராலோகான் சித்தியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சிபிஐ லோக்பால் வரம்பிற்குள் இல்லை என்றால் அப்புறம் லோக்பால் மசோதா எப்படி வலுவானதாக இருக்க முடியும். இதன் மூலம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை காப்பாற்ற முடியும். சிபிஐ மட்டும் லோக்பால் வரம்பிற்குள் வந்துவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்குத் தான் போக வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளைக் காப்பாற்றிக் கொண்டு, வலுவான லோக்பால் என்று கூறுகிறார்கள்.
மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது. அதற்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் அரசின் தவறுகளை எடுத்துக் கூறுவேன். பொதுத் தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு அரசைப் பற்றிக் கூறுவேன். நான் அறிவித்ததுபோன்று வரும் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருப்பேன். அதன் பிறகு சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக