வெள்ளி, 16 டிசம்பர், 2011

தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 வீழ்ச்சி!

சென்னை: தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ 608 வரை குறைந்தது.
தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகரித்தது. அதே நேரம் தங்க விற்பனையும் இந்த ஆண்டு உச்சத்தை எட்டியது. ஒரே ஆண்டில் பவுனுக்கு சுமார் 6 ஆயிரம் வரை கூடிய தங்கம், நடுத்தர மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதே நேரத்தில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ரூ.21 ஆயிரத்தை கடந்த தங்கம், அதற்கு பிறகு வந்த மாதங்களில் தங்கத்தின் விற்பனையில் ஒரு நிலையற்ற தன்மை காணப்பட்டது. ஒருநாள் கூடுவதும் மறுநாள் குறைவதுமாக இருந்து வந்தது. இருப்பினும் டிசம்பர் மாதத்தில் பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்தை கடக்கும் என்று தங்க விற்பனையாளர்கள் தெரிவித்து வந்தனர்.
விலை குறைந்தது இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பவுன் தங்கம் ரூ.608 குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,686-க்கும், பவுன் ரூ.21 ஆயிரத்து 488-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.76 குறைந்து, ரூ.2,610-க்கும், பவுன் ரூ.608 குறைந்து, ரூ.20, 880-க்கும் விற்பனையானது.

ஒரே நாளில் பவுன் தங்கம் ரூ.608 குறைந்திருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த விலை குறைவு தொடர்ந்து நீடிக்குமா? என்று நடுத்தர மக்களை ஏங்க வைத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக