திங்கள், 28 நவம்பர், 2011

DMK: இவ்வளவு பி.ஏ.,க்கள்., எம்.ஏ.,க்கள் பட்டதாரிகள் இருப்பார்களா? இருக்க முடியாது

சென்னை:"தீமையும், நன்மையும் நாமாகவே தேடிக் கொள்வதாகும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், அச்சுத கவுண்டரின் மகன் வாசுதேவன், சென்னை ரஞ்சன் நாயக்கர் மகள் காஞ்சனமாலாவிற்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
ஒருவருடைய வாழ்க்கை என்பது, அவர்கள் தங்களது ஆரோக்கியத்தை காத்துக் கொண்டு, தங்கள் நலன்களை காத்துக் கொண்டு, பிறர் நலம் பேணி வாழ்கின்ற வாழ்க்கையை யார் தேர்ந்தெடுத்து கொடுத்தார்களோ, அவர்களுக்கு எந்த நேரத்திலும், எந்தத் தீமையும் வராது.

தீமையும், நன்மையும் நாமாக தேடிக் கொள்வதே தவிர, மற்றவர்களிடமிருந்து வரக்கூடியவைகள் அல்ல என்று அன்றைக்கே பாடி வைத்திருக்கின்றனர்.தமிழினம் இன்றைக்கு சில பேரது நுழைவால், சிலரது சூழ்ச்சியால், சிலரது தாக்கத்தால் அவற்றை மறந்து, பலரது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை காண்கிறோம்.
தமிழகத்தில் தி.மு.க., இல்லாமல் இருந்திருந்தால், நீங்கள் யாரும் என்னை தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது. நம் வீடுகளில் இவ்வளவு பி.ஏ.,க்கள்., எம்.ஏ.,க்கள் பட்டதாரிகள் இருப்பார்களா? இருக்க முடியாது. இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கம் தான்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக