சனி, 5 நவம்பர், 2011

இந்தியாவுக்கு பாகிஸ்தான் நட்பு நாடு அந்தஸ்து

அட்டரி : இந்தியாவுக்கு ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கியிருப்பது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து சிஐஐ அமிர்தசரஸ் மண்டல தலைவரும் கன்னாப் பேப்பர்ஸ் இயக்குநருமான சுனீத் கோச்சர் கூறுகையில், பாகிஸ்தான் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.  இருதரப்பு வர்த்தகத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக