திங்கள், 14 நவம்பர், 2011

நீர்கொழும்பில் இலங்கையின் முதலாவது அதி சொகுசு பஸ் நிலையம்!

கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும், நீர்கொழும்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டிலும் 220 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு புதிய பஸ் நிலைய மூன்று மாடிக் கட்டிடத் தொகுதி அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதி சொகுசுடன் கூடிய சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த பஸ் நிலையப் பகுதி 60 ஆயிரம் சதுர அடி கொண்டதாகும். 78 கடைகளும் , உணவகம் திரைப்படமாளிகை காத்திருப்பு அறை, ஓய்வு அறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது.
ஒரே நேரத்தில் சுமார் 35 ஆயிரம் பயணிகள் இந்த பஸ் நிலையத்தைப் பயன்படுத்தக்கூடியதாக அமையப்பெற்றுள்ள இது இலங்கையின் அதிநவீன பஸ் நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக