வியாழன், 10 நவம்பர், 2011

ஹாலிவூட்டில் கையைச் சுட்டுக் கொண்டு இந்தியா திரும்புகிறது ரிலையன்ஸ்!

ViruvirupuLos Angeles, USA: 3 years ago, Reliance entered Hollywood with hundreds of millions of dollars in cash. Where are they now?  Terminating all those movie productions that didn’t work out for them. Indian money down the Hollywood drain!
ஹாலிவூட் சினிமா இன்டஸ்ட்ரியில் வர்த்தக ரீதியாக இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. 3 வருடங்களுக்கு முன் மில்லியன் கணக்கான டாலர் முதலீட்டுடன் ஹாலிவூட்டுக்குள் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் புகுந்த போது, இந்தியர்களின் ஆதிக்கம் ஹாவிவூட் சினிமா வர்த்தகத்தில் ஏற்படப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
3 வருடங்களின்பின் இன்று, ரிலையன்ஸ் முதலீடு செய்த மில்லியன் கணக்கான டாலர் தொகை, வெள்ளம் வடிந்ததுபோல மாயமாகி விட்டது. இதற்கு மேலும் ஹாலிவூட் சினிமா வியாபாரத்தில் ஈடுபடத்தான் வேண்டுமா என்று ரிலையன்ஸ் எண்ணத் தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸ் தனது பணத்தை ஹாலிவூட்டின் வெவ்வேறு செக்டர்களில் முதலீடு செய்திருந்த போதிலும், அவர்களது மிகப்பெரிய முதலீடு செய்யப்பட்டது DreamWorks ஸ்டூடியோ சினிமா தயாரிப்புகளில்தான். ட்ரீம்ஸ் ஒர்க்ஸில் ரிலையன்ஸின் முதலீடு 325 மில்லியன் டாலர்.
ட்ரீம்ஸ் ஒர்க்ஸ் ஸ்டூடியோ சமீபத்தில் இறங்கிய எந்த தயாரிப்பு முயற்சியும் பொருளாதார ரீதியில் ஆஹா-ஓஹோ லாபத்தைக் கொடுக்கவில்லை. லாபத்தைக் கொடுக்கும் என அவர்களது தயாரிப்பான Real Steel (Science fiction film), போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கவே திணற வேண்டியிருந்தது. Cowboys and Aliens (Science fiction Western film), லாபத்தைக் கொடுக்கவில்லை, 30 மில்லியன் டாலர் நஷ்டத்தைக் கொடுத்தது.

சமீபத்தில் அவர்களுக்கு லாபம் தேடிக்கொடுத்த ஒரேயொரு திரைப்படம், The Help (Comedy-drama film) மட்டும்தான். அதில் கிடைத்த லாபத்தைவிட, மற்றைய தயாரிப்புகளில் கிடைத்த நஷ்டம் பலமடங்கு அதிகம்.
3 வருடங்களுக்குமுன் ஹாலிவூட் பிசினெஸில் ரிலையன்ஸ் இறங்கியபோது, இன்டஸ்ட்ரியில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. காரணம், இவர்களது முதலீடுகள் அனைத்தும் A-list Artists (முன்னணி வசூல் நட்சத்திரங்கள்) திரைப்படங்களில் செய்யப்பட்டன. Julia Roberts, Jay Roach, Brad Pitt, Brett Ratner… என்று ரிலையன்ஸ் நட்சத்திர பட்டியல் இருந்தது.
ஹாலிவூட் இன்சைட் ட்ரேடர் ஒருவர், “இதை ரிஸ்க்-ஃபிரீ முதலீடு என்று ரிலையன்ஸ் நம்பியது. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் லாபம் அடைவதற்கு சான்ஸ் அதிகம் என்பது உண்மைதான். ஆனால், இப்படியான ஹை-பட்ஜெட் படங்கள் அடிவாங்கினால், லோ-பட்ஜெட் பணம் ஒன்றின் மொத்த பட்ஜெட்டின் 10 மடங்கு நஷ்டத்தைக் கொடுக்கும் என்பதை ரிலையன்ஸ் ஏனோ கணக்கில் எடுக்கவில்லை.” என்றார்.
ஹாலிவூட் பிசினெஸ் வட்டாரங்களில் அடிபடும் பேச்சு, “போன பணம் நஷ்டமாக போகட்டும்”  என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு, இந்தியா திரும்பவுள்ளது ரிலையன்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக