வியாழன், 10 நவம்பர், 2011

டிஸ்மிஸ் செய்யப்பட்ட மக்கள்நல பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம்

சென்னை : மக்கள் நலப்பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞர் அணி சார்பில் 15 ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் நலப் பணியாளர்கள் திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்டனர். இவர்கள், பஞ்சாயத்துகளில் வரி வசூலிப்பது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கண்காணிப்பது, எவ்வளவு ஆட்கள் பணியாற்றுகிறார்கள் என்ற வருகை பதிவேட்டை கவனிப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
 நேற்று முன்தினம் திடீரென்று மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  
இதையடுத்து, ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, வேலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்பாட்டம் நடத்தினர்.  தமிழகம் முழுவதும் இவர்களின்  ஆர்ப்பாட்டம் வலுத்து வருகிறது.  இவர்களுக்கு ஆதரவாக சென்னையில் 5க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக இளைஞர் அணி சார்பில், மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்துள்ளார். இதற்கிடையில், தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில செயற்குழுவின் அவசரக் கூட்டம் மதுரையில் நேற்று மாலை நடந்தது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், '3 முறை அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தைக் கூறி பணிநீக்கம் செய்துள்ளது.  வரும் 14ம் தேதி குடும்பத்துடன் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்து வோம்' என்றார்.

பெண்கள் கதறல்: ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென்று மாத்தூர் ஊராட்சியில் மக்கள் நலப் பணியாளராக பணியாற்றும் காளியம்மாள், ÔÔஎனக்கு வேலை பறிபோய் விட்டதே, குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்ÕÕ என்று கண்ணீர் விட்டு தரையில் உருண்டு, புரண்டார். சிறிது நேரத்தில் மயங்கினார். பெண்கள் சிலர் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது புறக்கணிப்பு இப்போது நீக்கம்: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், 100 நாள் வேலை திட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மக்கள் நலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. இப்போது அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

3 முறை தொடர் டிஸ்மிஸ்

நியமனம்    நீக்கம்    ஊழியர்கள்
2&7&1990    13&7&1991    25,000
15&9&1996    31&5&2001    18,000
ஜூலை 2006    8&11&2011    13,500

திமுக ஆட்சியில் நியமனம்; அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் என்று இதற்கு முன் 2 முறை நடந்துள்ளது. இப்போது 3வது முறையாக 13,500 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக