ஞாயிறு, 6 நவம்பர், 2011

கொழும்பில் தனது கிளையைத் திறந்தது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்!

இந்தியாவின் பிரபலமான தனியார் பல்கலைக்கழகமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தனது கிளையை கொழும்பில் திறந்துள்ளது. இத்தகவலை அந்த நாட்டு தொழில்துறை அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.எம். லங்கா என்ற பெயரில் இந்த பல்கலைக்கழகம் கொழும்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கொழும்பில் உள்ள காலாத்ரி ஹோட்டலில் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றுள்ளது.இதுகுறித்த மேல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. செனனை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் இதுகுறித்து மேற்கொண்டு எந்த விவரத்தையும் இதுவரை வெளியிட்டதாக தெரியவில்லை.

எஸ்ஆர்எம் கிளை திறப்பு குறித்து இலங்கை அமைச்சர் ரிஷாத் கூறுகையில், எஸ்ஆர்எம் வருகையால் இந்தியாவுடனான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொடர்புகள் மேலும் வலுப்படும் என்றார்.

சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் தனியார் பல்கலைக்கழகமாக இது வர்ணிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக