புதன், 23 நவம்பர், 2011

டாஸ்மாக் பார் விண்ணப்பம் மாசெக்களிடம்

சென்னையில் தற்போதுள்ள, டாஸ்மாக் மதுபான பார்களின் உரிமக் காலம் முடிவதால், புதிய உரிமம் வழங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த உரிமங்களை, போட்டியின்றி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையிலுள்ள டாஸ்மாக் கடைகளின், "பார்'களுக்கான உரிமம், அடுத்த மாதத்துடன் முடிகிறது. பார்களை நடத்துவதற்கான புதிய உரிமம் வழங்குவதற்கு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதேபோல, விழுப்புரம், திருச்சி மாவட்டங்களிலுள்ள பார்களுக்கும், டெண்டர் விடப்பட்டுள்ளது.ஒரு கடையின் மதுபான விற்பனை அடிப்படையில், குறைந்தபட்ச டெண்டர் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. உரிமம் பெறுபவர்கள், "பார்' வைத்து தின்பண்டங்கள் விற்பது, குளிர்பானம், தண்ணீர் விற்பது மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்யலாம்.ஒரு கடையின் ஆண்டு விற்பனை, 2 கோடியே, 40 லட்சம் ரூபாய் என வைத்துக் கொண்டால், மாதம் 20 லட்சம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது. அக்கடையில் சராசரி விற்பனை அதிகரிப்பு, பத்து சதவீதம் என்று வைத்துக் கொண்டால், அந்த தொகையான இரண்டு லட்சம் ரூபாய் இத்துடன் சேர்க்கப்படுகிறது.
இதில், 2.5 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. இதன்படி, அக்கடைக்கு, மாதம் 55 ஆயிரம் ரூபாய், குறைந்தபட்ச தொகையாக நிர்ணயிக்கப்படுகிறது.இத்தொகைக்கு மேல், டெண்டரில் யார் அதிகபட்ச தொகையை குறிப்பிடுகிறார்களோ, அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும். தற்போது சென்னையை பொறுத்தவரை, ஆளும் கட்சியின் மாவட்டச் செயலர்களிடம் தான் விண்ணப்பம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியினருக்கு உரிமம் வழங்க வேண்டும் என்பதற்காக, இம்முறையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மாவட்டச் செயலர்கள் வசம் ஒப்படைப்பதால், உள்ளாட்சித் தேர்தலில் சீட் கொடுத்தது போல, பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். மேலும், தி.மு.க.,வினர் கூட, அதிக தொகையை கொடுத்து, "பார்' வைக்கும் உரிமத்தை பெற வாய்ப்புள்ளது.மேலும், "பார்'களுக்கான உரிமக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், அந்த தொகையை, அங்கு குடிக்க வருபவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று, சரி கட்ட முயற்சிக்கின்றனர். உதாரணமாக, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரு கடை மட்டுமே உள்ளது. இதனால், அங்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். விற்பனையும் அமோகமாக இருக்கும்.

ஆனால், இந்த விற்பனை தொகையை வைத்து, "பார்' கட்டணத்தை நிர்ணயிப்பதில் சிக்கல் உள்ளது. காரணம், இப்பகுதியை சுற்றிலும் மேன்சன்கள் உள்ளதால், பெரும்பாலானோர் பார்களுக்கு வராமல், சரக்குகளை மட்டும் வாங்கி சென்று விடுவர். இதனால், "பார்' விற்பனையும் இல்லாமல், காலிப் பாட்டில் வருமானமும் இல்லாமல், உரிமம் எடுத்தவர் சிரமப்படுவார்.மேலும், முந்தைய தி.மு.க., ஆட்சியில் குறிப்பிட்ட கடையில் அதிக விற்பனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக