புதன், 23 நவம்பர், 2011

2G Case: இன்று ராஜா-கனிமொழிக்கு நீதிபதி கொடுத்த இரட்டை அதிர்ச்சி!

Viruvirupu
New Delhi, India: The 2G-Spectrum case trial has been shifted from Patiala House courts complex to high-security Tihar Jail effective next Thursday, November 24th. This announcement was made at 3.30 PM today (Tuesday) by Special CBI Judge O.P. Saini, and in conjunction with an order by the Delhi High Court. This decision was opposed by former Telecom Minister A Raja, DMK MP Kanimozhi and others accused.2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணையை பட்டியாலா ஹவுஸ் கோர்ட் காம்பிளெக்ஸில் மாற்றுவதாக அறிவித்து, தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உட்பட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. டில்லி ஹைகோர்ட்டின் உத்தரவுப்படி இந்த அறிவிப்பு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு, மிகவும் நெரிசலாக இருந்த கோர்ட்ருமில் வைத்து இந்த இடமாற்ற அறிவிப்பை மிகச் சுருக்கமாக வாசித்தார் நீதிபதி ஓ.பி.சைனி. அவரது அறிவிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வக்கீல்கள் உட்பட அங்கிருந்த பலருக்கும் அதிர்ச்சி அளித்ததை காணக்கூடியதாக இருந்தது.

“இந்த அறிவிப்பின்படி நவம்பர் 24-ம் தேதி, அதாவது வரும் வியாழக்கிழமை முதல் இந்த வழக்கின் விசாரணைகள் திகார் ஜெயிலில் உள்ள கோர்ட் ரூமில் நடைபெறும்” என்று கோர்ட் ரூமில் இருந்த இரைச்சலுக்கு மத்தியில் நீதிபதி தனது குரலை உயர்த்தி தெரிவித்தார். இடமாற்றத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.
டில்லி இந்தியா கேட்டுக்கு அருகே அமைந்திருந்த பட்டியாலா மகாராஜாவின் முன்னாள் அரண்மனையில்தான் இந்த கோர்ட் காம்பிளெக்ஸ் இயங்கிவருகின்றது. பல்வேறு ரகமான கேஸ்களை எடுத்துக் கொள்ளும் பட்டியாலா கோர்ட் காம்பிளெக்ஸில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் மாத்திரம் இயங்கவில்லை. புதுடில்லி, தெற்கு, மற்றும் தென்மேற்கு மாவட்டங்களின் குறிப்பிட்ட சில கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் வெவ்வேறு கோர்ட்டுகள் இந்த காம்பிளக்ஸில் உள்ளன.
கனிமொழி, ஆ.ராசா உட்பட குற்றம்சாட்டப்பட்டுள்ள வேறு சிலரும் இந்த முடிவை எதிர்த்து ரிட் போடவுள்ளதாக தெரிகின்றது. அதற்கு இரு காரணங்கள் உள்ளன.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள திகார் ஜெயிலுக்கே விசாரணைகளை கொண்டு செல்வதன்மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாக இல்லை என்பதை மறைமுகமாக சொல்கிறார்களா?” என்பதே இவர்களது  திகைப்பு கலந்த எதிர்ப்புக்கு முதல் காரணம்.
இரண்டாவது காரணம், சிறைப் பறவைகளாக உள்ள இந்த வி.ஐ.பி.-களுக்கு தினமும் கிடைக்கும் அவுட்டிங், இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வருவது மாத்திரமே. திகார் சிறைக்கு வெளியே வெளியுலகைப் பார்க்க அவர்களுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான். அத்துடன், கோர்ட் வளாகம் ஏசி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலையில் இருந்து கோர்ட் முடியும்வரை ஏசியில் இருக்கும் வாய்ப்பு இங்கே அவர்களுக்கு கிடைத்திருந்தது.
இங்குள்ள வேடிக்கை என்னவென்றால், 2ஜி வழக்கு விசாரணை கடந்தவாரம் தொடங்கப்பட்ட முதல் நாளில், கோர்ட்ரூமில் நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சாட்சிகள் என்ன சொல்கிறார்கள் என்பதுகூட சரியாகக் கேட்க முடியாத வகையில் இரைச்சலாக இருந்தது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வக்கீல்களே, இந்த விசாரணை பட்டியாலா கோர்ட்டில் நடப்பது பற்றி ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
அப்போது ஆட்சேபித்த வக்கீல்கள்கூட விசாரணை திகார் ஜெயில் வளாகத்துக்கு மாற்றப்படும் என நினைத்தே இருக்க மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக