வெள்ளி, 11 நவம்பர், 2011

கோயில் வாசலில் இளம்பெண் எரித்துக் கொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி ஆற்றங்கரையில் தான்தோன்றி விநாயகர் கோயில் உள்ளது. காலையில் ஆற்றில் குளிக்க நிறைய பேர் அங்கு செல்வர். இன்று காலை வழக்கம் போல் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோயில் வாசலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கருகிய நிலையில் இன்று காலை கிடந்தது.
இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு தக வல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி சுஜாதா, இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
கோயில் வாசலில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலத்தை பார்வையிட்டனர்.
அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் கருகிய நிலையில் இருந்தது.
நள்ளிரவில் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.
பெண் உடல் மீது ஊற்றி எரிப்பதற்காக மண்எண்ணெயை ஒரு கேனில் கொண்டு வந்துள்ளனர். அந்த கேன் கோயில் அருகில் கிடந்தது.
இதை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து விட்டாலும், அவர் அணிந்திருந்த பாவாடையின் நிறம் மட்டும் பச்சை நிறத்தில் இருந்தது.
கோயில் வாட்ச்மேன் பணியில் இருந்துள்ளார். கோயிலுக்குள் படுத்து அவர் உறங்கி கொண்டிருந்தார். ஆனால் தனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை என்று போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். மோப்ப நாய் சோதனையும் நடந்தது.

மர்ம ஆசாமிகள் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இந்நிலையில் கெரசின் கொண்டு வந்த கேனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் வாசலில் இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளிபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக