வியாழன், 3 நவம்பர், 2011

ஜாமீன் மறுப்பு- நீதி தவறிய செயல்: ராம்ஜேட்மலானி

புதுதில்லி, நவ.3: கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது நீதி தவறிய செயல் என்று அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம்ஜேட்மலானி கருத்துத் தெரிவித்துள்ளார்.இந்த ஜாமீன் விஷயத்தில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு நீதி தவறிய செயல் என்றே நான் கருதுகிறேன். இந்த நீதிமன்றத்தின் தவறை திருத்தி உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.ஜாமீன் கோரும் ஒரு நபர், தலைமறைவாக வாய்ப்பு இருந்தாலோ அல்லது வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்துவிடுவார் என்ற நிலையிருந்தால்தான் ஜாமீனை மறுக்க முடியும். இந்த வழக்கில் கனிமொழி இதுபோன்று நடந்து கொள்ள எவ்வித வாய்ப்பும் இல்லாதபோதும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது சரியல்ல என்று ராஜ்ஜேட்மலானி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக