செவ்வாய், 1 நவம்பர், 2011

இந்தியாவில் தயாரிக்கப்படும் டொயோட்டோ கார்கள்தான் பெஸ்ட்

எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் வாகனங்கள் தயாரிப்பதில் டொயோட்டோ நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலைகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் வகிக்கின்றன.
உலகின் இரண்டாவது பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் டொயோட்டோ இந்திய சந்தையில் 7 வது பெரிய நிறுவனமாக விளங்குகிறது.
தரம் மற்றும் சிறந்த வடிவமைப்பு ஆகியவற்றுக்காக வாடிக்கையாளர் மத்தியில் டொயோட்டோ கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் டொயோட்டோவுக்கு 50 கார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் கார் தயாரிப்பு குறித்து ஆண்டுதோறும் டொயோட்டோ ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதில், குறைகள் எதுவும் இல்லாமல் வாகனங்களை தயாரிப்பதில் உலக அளவில் பெங்களூரில் உள்ள டொயோட்டோ ஆலைகள் முதலிடம் பிடித்துள்ளன.
இதுகுறித்து டொயோட்டோ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறையில்லாத வாகனங்கள் தயாரிப்பில் முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக அக்கறையுடன், மிகுந்த கவனத்துடன் கார்களை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் டொயோட்டோ செயல்படும்," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக