செவ்வாய், 1 நவம்பர், 2011

ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என புலிகள் நம்பினர் என்ன நடந்தது- பஷில் ராஜபக்ஷ

புலிகள் அமைப்பு சமாதான யெற்பாடு மற்றும்
அரசியல் தீர்வு விடயங்களில் காட்டிய துளியளவிலான அக்கறையைக் கூட தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிக்காட்டுவதாக தெரியவில்லை. அரசியல் தீர்வு விடயங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பை யாவது குறிப்பிட டியுமா? என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் கூறும் விடயங்களை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மாறாக கூட்டமைப்பினர் தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீட்டுக்குள் இருக்கும் நெருப்பை வெளியில் கொண்டு செல்லக்கூடாது. வெளியில் இருக்கும் நெருப்பை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என கூறப்படுவதுண்டு.புலிகள் அமைப்புக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பல தடவைகள் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்கினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று ஜனாதிபதியின் அழைப்பை புலிகள் ஏற்றிருந்தால் இன்று நிலைமை வேறு விதத்தில் இருந்திருக்கும்.

எனினும் புலிகள் அமைப்பானது இறுதித் தருணத்தில் ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என நம்பியது.

ஆனால் இறுதியில் என்ன நடந்தது? இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றது. அதாவது தாங்களும் ஏமாற்றமடைந்து தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

இதேவேளை அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தலையிடக்கூடிய முழுமையான உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதற்கு உரிமையைக் கொண்டுள்ள இந்தியாகூட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு வரவேண்டும் என கூறுகின்றது. ஆனால் அதற்கு தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு ஆதரவு வழங்கவேண்டும். எனினும் இந்த செயற்பாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத் தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பையாவது குறிப்பிட முடியுமா? என்று நான் கேள்வி எழுப்புகின்றேன். தீர்வு விடயத்தில் புலிகள் அமைப்பு வெளிக்காட்டிய சிறிதளவு அக்கறையைக்கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிக்காட்டாமல் உள்ளமை கவலைக்குயதாகும்.

வடக்கு மக்களின் கருத்தைக் கேட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டும். மாறாக புலம் பெயர் தமிழ் மக்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதை நிறுத்தவேண்டும். கனடாவில் பேசிக் கொண்டிருக்கும் தமிழ் எம்.பி. இலங்கையில் பிறக்காதவர். அதாவது அடுத்த தலை முறையை சேர்ந்தவர். அவர் இலங்கையை விமர்சித்துப் பேசிக்கொண்டிருக்கின்றார். அவற்றைக் கேட்டுக்கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யெற்படக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக