செவ்வாய், 1 நவம்பர், 2011

துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரதவைக் கொன்றவர் அடையாளம் காணப்பட்டார்!

முல்லேரியாவில் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரதவைக் கொன்றவர் அடையாளம் காணப்பட்டார்!

COLOMBO: முல்லேரியாவில் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமுமான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டார்.

மீரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளான விதானலாகே அனுர துஷார என்பவரே இன்று இடம்பெற்ற அடையாள அணி வகுப்பின் போது அடையாளம் காணப்பட்டவராவார்.இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் பிரசந்த அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பயங்கரவாததத் தடுப்புப் பிரிவில் வைத்து விசாரணை செய்வதற்காக இரகசியப் பொலிஸாரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் நீதிவான் ஏற்றுக் கொண்டு அதற்கான அனுமதியையும் வழங்கினார். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் 15 ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக