செவ்வாய், 22 நவம்பர், 2011

நியூயார்க் செய்தி வாசிப்பாளர் விஸ்வரூபத்தில் கமலுக்கு ஜோடி

ஒருவழியாக விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி கிடைச்சாச்சு. அவர் பெயர் பூஜா குமார். இவர் நியூயார்க்கில்  தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு நடிகர் கமல் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம். ஆரம்பத்தில் இந்தபடத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் நடிப்பதாக இருந்தார். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்த வேளையில், படத்தின் சூட்டிங் தள்ளிபோனதால் விலகிக்கொண்டார் சோனாக்ஷி. இதனையடுத்து ஒரு நல்ல நடிகையை தேடி வந்தார் கமல். அனுஷ்கா, ஸ்ரேயா என்று பல நாயகிகளின் பெயர் அடிபட்டது. ஆனால் எந்த ஒரு நடிகையும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் படத்தின் நாயகி இல்லாமலே விஸ்வரூபம் படத்தை தொடங்கினார் கமல். தொடர்ந்து சூட்டிங் நடந்து வரும் நிலையில், விஸ்வரூபம் படத்திற்கான நாயகியை உறுதி செய்துள்ளார் கமல். இதுகுறித்து கமல் அளித்த பேட்டியில், விஸ்வரூபம் படத்தில் பூஜா குமார் என்றை பெண்ணை கதாநாயகியாக்கியுள்ளேன். அவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். நல்ல திறமையான நடிகை," என்று கூறியுள்ளார்.

இந்த பூஜா குமார் தமிழுக்கு ஒன்றும் புதுமுகம் கிடையாது. இவர் ஏற்கனவே கேயார் இயக்கத்தில் வெளிவந்த காதல் ரோஜாவே என்ற படத்தில் நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல பாலிவுட்டில் சில படங்களிலும் தலைகாட்டியுள்ளார். இவர் தற்போது நியூயார்க்கில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக