திங்கள், 21 நவம்பர், 2011

சி.பி.ஐ. ரெயிடு மேட்டரில், வரப்போகிறது சிதம்பரத்தின் அடுத்த உட்குத்து!

Viruvirupu
New Delhi, India: Union Finance Minister Pranab Mukherjee commented CBI’s registering a case against Shyamal Ghosh, who was Secretary in the Telecom Ministry during the BJP regime. Minister Mukherjee said, “CBI was doing its duty, assigned as per the law, in the 2G spectrum scam. They will take action against anybody who committed crime regardless of their status or job title

2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சட்டப்படி தனது கடமையையே செய்கின்றது. இதில் எந்த பாரபட்சமும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. இந்த வழக்கு தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசின்மீது கடும் தாக்குதலை நடாத்தியதை அடுத்தே அமைச்சர் முகர்ஜி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்றிரவு மத்திய நிதியமைச்சர் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தேவையற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது. சி.பி.ஐ. இந்த வழக்கில் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சுமத்துகின்றது. இவையெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள்.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தவறு செய்தவர்கள்மீது சி.பி.ஐ. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயம் எடுக்கும். அதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. எவ்வளவு உயர்ந்த பதவியில் உள்ள நபராக இருந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்யத் தயங்காது” என்று தெரிவித்திருக்கிறார்.
சும்மா சொல்லக்கூடாது, நிதியமைச்சர் இந்த விவகாரத்தில் ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி கொந்தளிப்பதன் காரணம், அவர்களது ஆட்சிக் காலத்தில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சின் செயலாளராக பணியில் ஷியாம்லால் கோஷ் இல்லத்தில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடாத்தியிருப்பதுதான். ஷியாம்லால் கோஷ் எந்தப் பதவியில் முன்பு இருந்திருந்தாலும், சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதை வெளிப்படையாக கூறுவதே அமைச்சர் முகர்ஜியின் ஒரு மாங்காய்.
அமைச்சர் வீழ்த்தியுள்ள இரண்டாவது மாங்காய், தற்போது கட்சிக்குள் அவரது போட்டியாளர் உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் வம்புக்கு இழுப்பது.
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், “இந்த முறைகேட்டில் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குற்றம் புரிந்தார் என்கிறது சி.பி.ஐ. அது சரி. அவர் குற்றம் புரிய துணையாக இருந்தவர், அப்போது நிதி அமைச்சராக இருந்த (தற்போது உட்துறை அமைச்சர்) ப.சிதம்பரம். இந்த முறைகேட்டில் ஆ.ராசாவுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அவ்வளவு பங்கு ப.சிதம்பரத்துக்கும் உள்ளது. ப.சிதம்பரத்தைக் காப்பாற்ற சி.பி.ஐ. முயற்சி செய்கிறது. அதற்காக சி.பி.ஐ. நடாத்தியதுதான் ஷியாம்லால் கோஷ் இல்லத்தில் சி.பி.ஐ. நடாத்திய அதிரடி சோதனை” என்று கூறியிருந்தார்.
பிரணாப் முகர்ஜி, “எவ்வளவு உயர்ந்த பதவியில் உள்ள நபராக இருந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்யத் தயங்காது” என்று தெரிவித்திருப்பது, ப.சிதம்பரத்தை எரிச்சல் ஊட்டுவதற்காக என்பதை புரிந்துகொள்ளா விட்டால், அமைச்சர் சிதம்பரம் அரசியலில் தொடர்வது வேஸ்ட். அவர் முகர்ஜிக்கு ஏதாவது ‘கதை’ சொல்லாவிட்டால் எப்படி?
உட்துறை அமைச்சரின் உட்குத்து ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக