வியாழன், 24 நவம்பர், 2011

இரட்டை வேடம் போடுவது யார்? என்ன சாதீத்தீர்கள்? ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் கேள்வி


பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் காலை முதல் உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்த் மாலையில் பேசுகையில்,
பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வை கண்டித்தால், கூட்டணிக் கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது என்கிறார்கள். இரட்டை வேடம் போடுவது யார்? 100 நாள் ஆகிவிட்டது விஜயகாந்த் பாராட்டவில்லை. 100 நாள் ஆட்சியில் என்ன சாதீத்தீர்கள் பாராட்டுவதற்கு. அதற்குத்தான் அன்றைக்கே சொன்னேன் 6 மாதம் ஆகட்டும் ஆட்சியைப் பற்றி சொல்கிறேன் என்று.
சமச்சீர் கல்வி கொண்டுவரக் கூடாது என்பதற்காக எவ்வளவு செலவு செய்தீர்கள். புதிய சட்டமன்றத்தை பூட்டி வைத்திருக்கிறீர்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றப்போகிறோம் என்கிறீர்கள். அதை ஏன் மாற்றுகிறீர்கள் என்றால் மருத்துவமனை வரும் என்கிறார்கள். மருத்துவமனை அமைக்க இடம் இல்லையா.
இதற்கெல்லாம் செலவழிக்கும் பணத்தை மாற்றி பால் விலை உயர்வை தடுக்கலாம் இல்லையா. பஸ் கட்டணத்தை ஏன் உயர்த்துகிறீர்கள். அதிகாரிகள் தவறு செய்கிறார்கள். அதை கண்டுபிடியுங்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக