வியாழன், 24 நவம்பர், 2011

கமலா செல்வராஜ் மருத்துவமனை உள்பட பிரபல மகப்பேறு மருத்துவமனைகளில் ஐடி ரெய்டு


Kamala Selvaraj
சென்னை: நடிகர் ஜெமினிகணேசனின் மகளும் பிரபல மகப்பேறு மருத்துவருமான கமலா செல்வராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதேபோல சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர்களின் வீடுகள், மருத்துவமனைகளிலும் ரெய்டு நடந்துள்ளது.
இந்த சோதனையில், ஏராளமான ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகர் ஜெமினிகணேசனின் மகளும் பிரபல மகப்பேறு மருத்துவருமான கமலா செல்வராஜ் சோதனைக்குழாய் குழந்தை பிறப்பிற்கு பிரசித்தி பெற்ற மருத்துவராவார். இன்று காலையில் சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி சாலையில் உள்ள கமலா செல்வராஜின் வீட்டில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 மணி சோதனை மேற்கொண்டனர். மேலும், கமலா செல்வராஜுக்கு சொந்தமான ஜி.ஜி மருத்துவமனையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கருத்தரித்தல் மையங்கள்
சென்னை தவிர மாநிலம் முழுவதும் கிளைகள் அமைத்துள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரபல பால்வினை நோய் மருத்துவர் காமராஜின் வீடு மற்றும் அவரது மருத்துவமனைகளிலும் வருமானவரி சோதனைகள் மேற்கொண்டுள்ளனர், இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக