வெள்ளி, 18 நவம்பர், 2011

பஸ் கட்டண உயர்வை திசை திருப்ப போக்குவரத்துறை அதிகாரிகளின் வீடு, அலுவலங்களில் ரெய்டு


தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா 17.11.2011 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசினார்.
அதில், போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரையில், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழங்கள் செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக் கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் கருத்தில்கொண்டு, பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன என்றும், இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த திடீர் அறிவிப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. பொதுமக்கள் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை, பத்திரிகைகளில் பேருந்து கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு பற்றிய செய்தி மக்கள் மனதில் பதியும்படி வெளிவரும் என்பதால், தமிழக அரசு இந்த விஷயத்தை திசை திருப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வெள்ளிக்கிழமை அன்று காலை முதலே போக்குவரத்துத்துறையில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை அவர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வீடுகளிலும் சோதனை நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்திகள் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள், ரேடியோக்களில் வெளியானால், பேருந்து கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு போன்றவை பெரிய விஷயமாக எடுபடாது என்ற நம்பிக்கையில் உள்ளது ஆளும் அதிமுக தரப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக