வியாழன், 10 நவம்பர், 2011

ஜெ. பார்சல் பண்ணிய அமைச்சர்!கலைஞர் கிளருவாரா?

ViruvirupuChennai, India: Jayalalitha’s minister made a private deal in conjunction with a deal already in place. A source says the file is with Karunanidhi now.
முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதற்காக கல்தா கொடுக்கப்பட்டது என்ற கதைகள் ஒருபுறமாக அடிபட்டுக் கொண்டிருக்க, இவர் தொடர்புடைய குற்றச்சாட்டு ஒன்று விரைவில் எதிர்க் கட்சிகளால் கிளப்பப்படலாம் என்று கூறப்படுகின்றது.
அதனால்தான் அவசர அவசரமாக ஆள் அமைச்சரவையில் இருந்து பார்சல் பண்ணப்பட்டார் என்கிறார்கள்.
தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கிய இலவச கம்ப்யூட்டர் திட்டத்தில் இவர் ஒரு வில்லங்கத்தில் சிக்கியுள்ளதாக தெரிகின்றது. விவகாரத்தை யாராவது கோர்ட்டுக்கு கொண்டுபோனால், இந்த முன்னாள் மாண்புமிகு மாட்டிக்கொள்ள சான்ஸ் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.
இதிலுள்ள கேட்ச் என்ன? ஒருவேளை கோர்ட்டு கேஸ் என்று வந்துவிட்டால், அதில் கூறப்போகும் பணத் தொகைக்கும், இவர் கண்ணால் பார்த்த தொகைக்கும் இடையே வித்தியாசம், மலையும் மடுவுமாக இருக்குமாம்!

எமக்குக் கிடைத்த தகவல்கள் என்ன சொல்கின்றன என்றால், இவர் தேன் எடுத்தபோது புறங்கையை நக்கியவர் மாத்திரமே. பாட்டில் பாட்டிலாக தேன் பாய்ந்த இடம் வேறு. ஆனால், தேன்கூடு முழுவதிலும் அண்ணனின் கையொப்பம் இருக்கிறது. அமைச்சர் என்ற முறையில் இவர் போட்ட (அல்லது இவரிடம் வாங்கப்பட்ட) கையொப்பம், நாளைக்கே இவருக்கு எமனாக மாறக்கூடும் என்கிறார்கள் அதிகாரிகள் மட்டத்தில்.
உண்மையில் இலவச கம்ப்யூட்டர் திட்டத்தில் எந்தவொரு கன்ட்ராக்ட்டையும் யாருக்கும் கொடுக்கும் வாய்ப்பே இவருக்கு வரவில்லை. எந்தெந்த நிறுவனத்துக்கு கன்ட்ராக்ட் என்பது ‘மேலே எங்கோ’ தீர்மானிக்கப்பட்டு பைல் தயாரானது. நம்ம அண்ணன் ஆனந்தமாக ஆட்டோகிராப் போட்டார்.
அதுவரை சரி. அதற்குப் பிறகு சம்மந்தப்பட்ட கம்பனி ஒன்றுடன் அண்ணன் வேறு ஒரு கிளை டீல் வைத்துக் கொண்டார்.
“கம்ப்யூட்டருக்கான விலையில் மாற்றம் செய்ய முடியாதபடி ஒப்பந்தம் உள்ளது. அதில் கைவைக்க முடியாது. வேண்டுமானால் அதன் அக்சசரிகளை குறைக்கலாம்” என்பதுதானாம் டீல். அதாவது மெயின் சிஸ்டத்துடன் வரும் அட்-ஓன்களில் சிறியதாக எதையாவது குறைக்க தமிழக அரசு சம்மதித்தால், பெரிய எண்ணிக்கையில் கம்ப்யூட்டர் சப்ளை நடக்கும்போது, சிறு துணி, பெரு வெள்ளம்!
இந்த விவகாரம்தான் எங்கோ சிக்கிக் கொண்டது. அது மாத்தரமல்ல, கோட்டையில் இருந்து கோபாலபுரம்வரை விபரங்கள் போய் விட்டதாகச் சொல்கிறார்கள். அவர்கள் இதை பெரிய விவகாரமாக மாற்றும் முன்னர் இந்த மாண்புமிகுவை, ‘முன்னாள்’ ஆக்கியிருக்கிறார்கள்.
இப்போது, இவரது பிரைவேட் டீலை இழுத்தால், செயின் ரியாக்ஷன் போல மெயின் டீலும் வெளியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!  ஆனால், மெயின் டீலிலுள்ள தொகை, உதயகுமாரை ஆச்சரியப்படுத்தும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக