வியாழன், 10 நவம்பர், 2011

ராஜா-கனிமொழியின் 2G Case: நாளை ஆரம்பம்

ViruvirupuNew Delhi, India: 2G-Spectrum main case likely to commence from Tomorrow. CBI special court Judge O.P. Saini confirmed the ability of framing charges against all accused. Judge accepted there is sufficient evidence against all 17 accused including 3 telecom firms.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகும் என்று தெரிகின்றது. அப்படியானால் இவ்வளவு காலமும் நடைபெற்றது என்ன?
நடைபெற்ற மோசடி பற்றிய குற்றப் பத்திரிகை தாக்கல், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தல் ஆகிய ஆரம்பகட்ட வேலைகளே இவ்வளவு காலமும் நடைபெற்றன.
சுருக்கமாகச் சொன்னால், இவ்வளவு காலமும் காண்பிக்கப்பட்டது வெறும் ட்ரெயிலர்தான்.  நாளை வெள்ளி முதல் திரையிடப்படுகிறது மெயின் பிலிம்!
கடந்த மாதம் (அக்டோபர்) 22-ம் தேதிதான், இந்த விசாரணைக்கான முறையான அடித்தளம் சரி செய்யப்பட்டுள்ளது. அதுவரை, பிட், பிட்டாக இருந்த வெவ்வேறு சம்பவங்கள், மற்றும் வெவ்வேறு நபர்களை ஒரே வழக்குக்குள் தொகுத்து, விசாரணை ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை முடிந்து விட்டாலே, பிரதான வழக்கை ஆரம்பிக்க பிராசிகியூஷன் தரப்பு தயார் என்று அர்த்தம்.

அக்டோபர் 22-ம் தேதி சிஇபி.ஐ சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனியின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆவணத்தின்படி, மொத்தம் 17 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சித்தரிக்கப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 3 டெலிகாம் நிறுவனங்களும் அடக்கம்.
நீதிபதி முன் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள கிரைம் நோட்ஸின்படி, இந்த 17 பேர் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நியாயமான தொடர்புடைய ஆதாரங்கள் உள்ளதாக கோர்ட் உறுதி செய்துள்ளது.
கோர்ட் பரிசீலித்த ஆதாரங்களில் ஏதாவது ஒன்றாவது ஏற்றுக் கொள்ளப்படத் தக்க ஆதாரம் அல்ல என கோர்ட் முடிவு செய்திருந்தால், சம்மந்தப்பட்ட ஆதாரத்தை வழக்கில் இருந்தே அகற்றியிருக்க முடியும். அதனுடன் தொடர்புடைய நபரையும் வழக்கில் இருந்து விடுவித்திருக்க முடியும்.
உதாரணமாக, கனிமொழி தொடர்புடைய ஆதாரங்கள், கலைஞர் டி.வி.க்கு பணம் வந்த விவகாரம் பற்றியவை. கலைஞர் டி.வி.க்கு பணம் வந்த விதம் சந்தேகத்துக்கு இடமானது என காட்டுவதற்காக சி.பி.ஐ. வைத்துள்ள ஆதாரங்கள் போதுமானவை அல்ல என கோர்ட் கருதியிருந்தால், அக்டோபர் 22-ம் தேதி, அந்த ஆதாரங்களை வழக்கில் இருந்து அகற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டிருக்கும்.
அப்படி நடந்திருந்தால், அதன் செயின் ரியாக்ஷனாக, கனிமொழியை வழக்கில் இருந்து நீக்கி விடுமாறு கோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கும்.
சி.பி.ஐ. தாக்கல் செய்த விசாரணை ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட 17 அக்யூஸ்ட்டுகள், ஆயிரக் கணக்கான எவிடென்ஸ்கள் ஆகியவற்றில் எந்தவொரு சிறிய ஆதாரமோ, அக்யூஸ்ட்டோ, நீதிபதியால் நீக்கப்படவில்லை. அதன் அர்த்தம், வழக்கு பிராசிகியூஷன் தரப்புக்கு மிக ஸ்ட்ராங்காக உள்ளது!
முன்னேற்பாடுகள் முடிந்து, நாளை தொடங்குகிறது வழக்கின் மெயின் விசாரணை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக