திங்கள், 7 நவம்பர், 2011

சகுனியில் அனுஷ்காவின் குத்தாட்டம்!

Anushka to dance single song in saguni
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா, கார்த்தி நடித்து வரும் சகுனி படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளாராம். "அருந்ததி" படம் மூலம் உச்சத்திற்கு சென்றவர் நடிகை அனுஷ்கா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கூடவே கைநிறைய படங்களும் வைத்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்த அனுஷ்கா, சமீபகாலமாக இதுபோன்ற வேடங்களில் நடிக்க சம்மதிப்பது இல்லையாம். அதுதானே உங்களது பெரிய பலமே என்று இயக்குநர்கள் கூறினால் சிரித்து சமாளித்து விடுகிறாராம்.

இந்தநிலையில் புதுமுக இயக்குநர் ஷங்கர் தயால் இயக்கத்தில், கார்த்தி, ப்ரணீதா நடித்து வரும் புதிய படமான "சகுனி"-யில், அனுஷ்காவின் குத்தாட்டத்தை வைக்க விரும்பி, அவரை அணுகியுள்ளனர் படக்குழுவினர். நடிகை அனுஷ்காவும்,  சகுனி படத்தில் குத்தாட்டம் போட சம்மதித்து இருக்கிறாராம். இதற்கு முக்கிய காரணம் பிரபல நடிகர் ஒருவரின் சிபாரிசு தானாம். அதேசமயம் இந்தபடத்துக்கு மட்டும்தான் குத்தாட்டம் என்றும், இனிமேல் இதுபோன்ற ஆட்டத்திற்கு யாரும் கூப்பிட்டால் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம் அனுஷ்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக