திங்கள், 28 நவம்பர், 2011

நந்தன் நிலகேனி நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் ப.சிதம்பரம் புகார்



P Chidambaram and Nandan Nilekani
டெல்லி: ஆதார் அட்டை வழங்கும் திட்ட தலைவர் நந்தன் நிலகேனி நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பிரமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆதார் அட்டை வழங்கும் திட்ட தலைவர் நந்தன் நிலகேனி மீது புகார் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 11ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ப. சிதம்பரம் எழுதியிருப்பதாவது,
ஆதார் அட்டை திட்டத்தின் தலைவராக உள்ள நந்தன் நிலகேனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய பதிவாளர் ஜெனரலின் பணிகளில் தலையிடுகிறார்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் அவராகவே பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கத் துவங்கியுள்ளார். இந்த திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரலின் பொறுப்பில் இருந்து தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.
பயோமெட்ரிக் தகவல்களை யார் சேகரிப்பது என்பது குறித்து அமைச்சகத்தில் முடிய செய்யக் கோரி ப. சிதம்பரம் இந்த விவகாரத்தை பிரதமர் மற்றும் திட்டக்குழு தலைவரிடம் தெரிவித்துள்ளார்.பிரதமரின் தலைமைச் செயலாளர் பலோக் சாட்டர்ஜி மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் சி. சந்திரமௌலி ஆகியோரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினார்.
ப. சிதம்பரத்தின் கடிதம் குறித்து நந்தன் நிலகேனி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக