செவ்வாய், 8 நவம்பர், 2011

நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? விஜயகாந்த்

சென்னை நகர் முழுவதும் தற்போது பெய்த மழையின் காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கியுள்ளதால் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. ஆனால் இதுவரையில் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மழை திடீரென்று தான் வரும். அது சொல்லிக்கொண்டு வராது. எனவே மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இன்றைக்கு பால் விலை உயர்ந்து உள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து இருக்கிறது. காய்கறி விலை உயர்ந்திருக்கிறது இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக