செவ்வாய், 8 நவம்பர், 2011

கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது எல்லையைத் தாண்டாதீர்' ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை!

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது எல்லையைத் தாண்டாதீர்' ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை!
ராமநாதபுரம்:"கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. எல்லையைத் தாண்டாதீர்' என, இந்திய கடலோரக் காவல் படையினர், ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களுக்கு, நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர். மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, இந்திய கடலோரக் காவல் படையினர், நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வானிலை அறிக்கையை, தினமும் கூர்ந்து கவனியுங்கள். லைப் ஜாக்கெட், வாக்கி டாக்கி, விசில், மிதவை கட்டை ஆகியவற்றை, உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.எல்லைப் பகுதியைத் தாண்டி மீன் பிடிக்காதீர்கள். ஏனெனில், கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது. இதைக் கண்டறிய, எல்லைக்குரிய வரைபடத்தை, உடன் வைத்துக் கொள்ளுங்கள்.ஆபத்துக் காலங்களில், அவசர உதவிக்கு, தூத்துக்குடி, சென்னை, மண்டபத்தில் உள்ள கடலோரக் காவல் படையினரை அழைத்துக் கொள்ளலாம்.அவசரத்துக்கு, 1554, 107 அல்லது 108 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். சட்டத்துக்குப் புறம்பாக, எல்லை தாண்டி ஆபத்தில் சிக்கினால், இந்த எண்களுக்கு அழைத்தாலும், எங்களால் காப்பாற்ற இயலாது.இவ்வாறு, அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக