ஞாயிறு, 13 நவம்பர், 2011

பாலிவுட் நடிகர்களுக்கு ரஜினிகாந்த் கண்டனம்


பட விற்பனைக்கும், விநியோகஸ்தர்களை கவரவும், ரசிகர்களை ஈர்ப்பதற்காகவும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது.
கோலிவுட்டில் இருக்கும் இந்த ஜுரம் பாலிவுட்டுக்கும் பரவி விட்டது. டாப் ஹீரோக்கள் என்று சொல்லப்படும் ‘கான்’ நடிகர்கள் ரஜினியின் பெயரை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
ஷாருக் கான் நடித்த ‘ரா ஒன்’ படத்தில் முக்கிய காட்சியில் ரஜினி நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முதலில் ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு வந்தது.
உடல்நலம் பாதித்து சிகிச்சை பெற்றுவரும் ரஜினியை தற்போது ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
துதொடர்பாக ஷாருக்கானிடம் ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டது. ஒருநாளில் சில மணி நேரம் மட்டுமே ரஜினி நடித்து தர சம்மதித்தார்.

அந்த காட்சி, சில நொடிகள் மட்டுமே படத்தில் இடம் பெற்றது. ஆனால் இது கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்ட காட்சி என்ற மாற்றுக் கருத்தும் கிளம்பியுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆமீர்கானுடன் விளம்பர படம் ஒன்றில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. கல்வியை மேம்படுத் துவதற்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக ரஜினி சார்பில் அவரது உதவியாளர் வி.எம்.சுதாகர்,
’’ஆமிர்கானுடன் ரஜினி நடிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி எந்த விளம்பர படத்தில் நடிக்கவும் அவர் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

பாலிவுட் ஸ்டார்களும், இன்னும் சிலரும் மீடியாக்களின் கவனத்தை கவரவும், விளம்பரத்துக்காகவும் இப்படி தகவல்களை பரப்புகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற பரபரப்புகளுக்கு ரஜினி என்றுமே பதில் அளித்ததில்லை.

விளம்பரத்துக்காகவும், பரபரப்புக்காகவும் ரஜினியின் பெயரை பிரபலங்கள் பயன்படுத்திக் கொள்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக