செவ்வாய், 1 நவம்பர், 2011

இன்று முதல் யாழ்.-கொழும்பு பகல் நேர பஸ் சேவை தொடங்குகிறது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பகல்நேர பேரூந்து சேவை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்தச் சேவை நாளை செவ்வாய்கிழமை(01.11.2011) முதல் நடைபெறவுள்ளது. இந்தச்சேவை யாழ்-கொழும்பு பிரதான பாதையில் பகல் நேரத்தில் இருவழிச் சேவையாக ஈடுபடவுள்ளதுடன், சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் தினமும் காலை 6.45 மணிக்கு யாழ்.பேரூந்து தரிப்பிடத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் சேவையில் ஈடுபடவுள்ளது. வவுனியா, மதவாச்சி, தம்புள்ளை, குருநாகல், ஊடாக நடைபெறவுள்ள இந்தப் பேரூந்து சேவை கொழும்பு செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளவகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் தினமும் 3 இ.போ.ச பேரூந்துகள் இரவுவேளையில் மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக