வெள்ளி, 4 நவம்பர், 2011

தமிழக அமைச்சரவையில் மாற்றம்-6 பேர் நீக்கம்-6 பேர் சேர்ப்பு-திருச்சி மேற்கு பரஞ்சோதி

தமிழக அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டு 6 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்னர். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.பரஞ்சோதி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக நேற்றுதான் செய்திவெளியானது.இந்த நிலையில் தற்போது அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் ஜெயலலிதா. அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் இது.
செந்தமிழன், உதயக்குமார், சிவபதி நீக்கம்
அமைச்சர்கள் செந்தமிழன், ஆர்.பி. உதயக்குமார், சிவபதி, சண்முகவேலு, புத்தி சந்திரன், சண்முகநாதன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மு.பரஞ்சோதி அமைச்சரானார்
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.பரஞ்சோதி, பரமக்குடி எம்.எல்.ஏ. டாக்டர் சுந்தரராஜன், மாதவரம் வி.மூர்த்தி, நன்னிலம் காமராஜ், சிவகாசி ராஜேந்திர பாலாஜி, கிணத்துக்கடவு தாமோதரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம்

சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இனி தகவல் தொழில்நுட்பத்துறையை கவனிப்பார். தாமோதரனுக்கு வேளாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.வி.ரமணாவுக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கப்பட்டுள்ளது. டி.கே.எம்.சின்னையாவுக்கு கால்நடை பராமரிப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

சுந்தரராஜன் கைத்தறி துறை அமைச்சராக இருப்பார். மு.பரஞ்சோதிக்கு அறநிலையத்துறை, சட்டம், நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

செல்வி ராமஜெயம் சமூ்க நலத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். காமராஜுக்கு உணவுத்துறையும், மூர்த்திக்கு பால்வளத்துறையும் தரப்பட்டுள்ளது.

செய்தித் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி செயல்படுவார்.

மு.சி. சம்பத்துக்கு ஊரக தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக