ஞாயிறு, 13 நவம்பர், 2011

சீட் தர 5 கோடி பணம் கேட்டார் ராமதாஸ்- குண்டு போடும் வேல்முருகன் கோஷ்டி

சட்டசபைத் தேர்தலில் சீட் தர வேண்டுமானாலும் ரூ. 5 கோடி பணம் தர வேண்டும் என்று கூறினார் டாக்டர் ராமதாஸ் என்று பாமகவின் முன்னாள் எம்.எல்ஏக்கள் காவேரி, காமராஜ் ஆகியோர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த இருவரும் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீபகாலமாக கடுமையான உழைப்பாளிகள், மூத்த உறுப்பினர்கள், திறமையான இளைஞர்களை பாமகவில் இருந்து நீக்குவது தொடர்கதையாகி வருகிறது. தனது மகன் அன்புமணியிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ராமதாஸ் நினைப்பதே இதற்கு காரணம்.
ராமதாசின் தொழில் முறை பங்குதாரரான ஜி.கே.மணியை அவரால் நீக்க முடியாது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது போட்டியிட வாய்ப்பு கேட்ட அனைவரிடமும் தலா ரூ. 5 கோடி கேட்டு பேரம் பேசினார். போட்டியிட்டு தோற்ற பலரது சொத்துகளை தனது குடும்பத்தினர் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்கள்.
தமிழ் உணர்வு மிக்க இளைஞரான வேல்முருகனை கட்சியிலிருந்து நீக்கியதுடன் அவரது குடும்பத்தையும் ராமதாஸ் இழிவுபடுத்தியது வேதனைக்குரியது. எங்களை போல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் வேல்முருகன் தலைமையில் விரைவில் புதிய இயக்கம் துவங்க உள்ளோம்.
8 மாவட்டங்களில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது. முன்னாள் எம்பிக்கள் புதா.இளங்கோவன், துரை, அருள்மொழி, முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிய இயக்கம் வன்னிய மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைவரின் உரிமைகளுக்காகவும் பாடு படும். நாங்கள் தான் உண்மையான பாமகவினர் என்பதை நிரூபிப்போம் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக