வியாழன், 3 நவம்பர், 2011

51 யாழ் மாணவர்களுக்கு இராணுவத்தினரால் புலமைப்பரிசில்

வடமாகாணத்தில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தினர் அப் பகுதி மாணவர்களின் கல்வியை மேம்படுத்துமுகமாக பல திட்டங்களை அமுல்படுத்தி, அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்தியும் வருகின்றனர்.
பாடசாலைகளில் புதிய கட்டிடங்களை நிர்மானித்தல், உடைந்த கட்டிடங்களை புனர்நிர்மானம் செய்தல், பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளித்தல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல், க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) ஆகிய பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல் போன்றன அவற்றில் சிலவாகும்.

அகற்கமைவாக அண்மையில் பருத்தித்துறை 521ஆவது படைப்பிரிவின் சிவில் விவகார அலுவலகத்தினால், ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொர் நல்லெண்ண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் அப்பகுதியிலுள்ள ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த 51 மாணவர்களுக்கு தமது பாடாசாலைக் கல்வியை நிறைவேற்றும் வரை மாதாந்தம் 1000/= வழங்கும் முகமாக புலமைப்பரிசில் ஒன்று வழங்கப்பட்டது.
மேலும் அம்பேசிவம் அறக்கட்டளை நிதியத்தால் இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு அனுசரனை வழங்கப்பட்டுள்ளது. நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். இதில் இலங்கை வங்கியில் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக