சனி, 26 நவம்பர், 2011

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்


Check out this exclusive video shot during the recording of the song with the music composer Anirudh,Dhanush,Shruti Hassan, Aishwarya and Sound Engineer Sivakumar

சென்னை, நவ.23: ’3' படத்தில், தனுஷ் எழுதி அவரே பாடியிருக்கும் கொலவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனராம். தமிழ் சேனல்கள் மட்டுமல்லாமல், வட இந்திய டிவிக்களிலும் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் போடப்பட்டு ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல் படமான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர். "ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற அந்தப் பாடலை தனுஷ் எழுதி, அவரே பாடியிருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 4 நாட்களில் இந்தப் பாடலை 10 லட்சம் பேர் கேட்டிருக்கிறார்களாம். இது ஒரு புதிய சாதனை என்கிறார்கள். வெளிநாட்டவர்களும் இணையத்தில் இந்தப் பாடலைக் கேட்டு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக