சனி, 26 நவம்பர், 2011

ஆயிரத்தில் ஒருவன் 2 தனுஷுக்காக...

தனுஷின் ’மயக்கம் என்ன’  படம் தியேட்டர்களில் திரைடப்பட்டு ரசிகர்களால் படம் ஹிட் என்ற பெருமையை பெற்றுள்ளது.  அடுத்ததாக தனுஷ் தனது மனைவியான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ’3’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 3 படத்தின் ஒரே ஒரு பாடல் வெளியிடப்பட்டு அந்த பாடலும் சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றிய யோசனையில் செல்வராகவன் உள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முடிவில் தூதுவனாக நடித்த நடிகர் கார்த்தி, சோழ இளவரசனை காப்பாற்றி அழைத்து செல்வது போன்று முடித்திருந்தார். 
எனவே அந்த சோழ இளவரசனாக தனுஷை நடிக்க வைக்கும் முயற்சியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளார். ’ஆயிரத்தில் ஒருவன்-2’ படம் தனுஷுக்கான படம் என்று செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.  இந்த படத்தை இயக்குனரின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரிப்பதாக கூறப்படுகிறது.  தனுஷ் இந்த படத்திற்காக 6 மாதம் கால்ஷீட் கொடுத்தால் போதும் படத்தை முடித்துவிடுவேன் என்று செல்வராகவன் தெளிவுபட கூறியுள்ளார். 

பெரும்பாலும் தனுஷ் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பார் என்று தான் தெரிகிறது. ஏனென்றால் முன்பு ஆயிரத்தில் ஒருவன்(கார்த்தி நடித்த முதல் பாகம்) படத்தை பற்றி கலந்தாலோசிக்கும் போது இயக்குனர் செல்வராகவனுடன் இருந்த தனுஷ், தானே இந்த படத்தில் நடிப்பதாக கூறினார்.   ஆனால் செல்வராகவன் அதை மறுத்துவிட்டார். இதுவரை தன் அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். எனவே நடப்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக