வியாழன், 13 அக்டோபர், 2011

சட்டப்படி விபசாரம் தவறில்லை, உடலுறவுக்கு ஆண்களை அழைப்பதுதான் தவறு

சட்டப்படி ஒழிக்கமுடியாது (ஹாய் அட்வகேட்!)

ஹாய் அட்வகேட்!
விபசாரம் தவறில்லை, உடலுறவுக்கு ஆண்களை அழைப்பதுதான் தவறு என்கிறார்கள் சிலர். இது உண்மையா? சட்டத்தால் விபசாரத்தை ஒழிக்கமுடியாதா?
ஹரன் பிரசன்னா, ராயப்பேட்டை
 On the edge: Mumbai's Kamathipura, Asia's largest red-light district.
விபசாரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் அது குற்றமாகாது.
விலைமாதர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னுடைய தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் பிரசுரிக்கக்கூடாது. ஆடவரை வசீகரித்தல், வாடிக்கையாளர்களைத் தருவித்தல் குற்றமாகும்.
பொது இடங்களிலும் அரசால் பகிரங்கப்படுத்தப்பட்ட இடங்களிலும் (Notified Areas) விபசாரம் செய்வது குற்றமாகும்.
வாடிக்கையாளர் விலைமாதரிடம் பொது இடத்திலிருந்து 200 கஜம் தூரத்துக்கு உட்பட்ட இடத்தில் சல்லாபித்திருந்தால் அது குற்றமாகும்.
அந்த வாடிக்கையாளருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
18 வயதுக்கும் குறைவான ஒரு விலைமாதுவிடம் சகவாசியாக இருந்தால் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
விலைமாதர் இல்லம் (Brothel) நடத்துவது குற்றம். விலைமாதர் இல்லங்கள் நடத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
விலைமாதுவின் வருமானத்தில் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் (pimps) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்று சட்டம் சொல்கிறது.
விபசாரம் தொடர்பான பல விஷயங்களை குற்றங்கள் என்று Immoral Traffic (Prevention) Act, 1986 விபசாரத் தடுப்புச் சட்டம் கூறுகிறது. இத்தகைய குற்றங்களை விசாரிக்க காவல் துறையில் விபசாரத் தடுப்புப் பிரிவு என்ற ஒன்றும் செயல்படுகிறது.
மேலும், விபசாரத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டால் அவர்களுக்கு அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
விபசாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குற்றங்கள், ஆனால் விபசாரம் குற்றமில்லை. அதாவது, விபசாரத்தைத் தடுக்கத்தான் சட்டம் முனைகிறதே தவிர ஒழிக்க அல்ல.
0
S.P. சொக்கலிங்கம்
www.tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக