வியாழன், 13 அக்டோபர், 2011

கே.என்.நேரு!: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?


வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்ட கே.என்.நேரு!
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சை சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இதனால் காலியாக உள்ள அந்த தொகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மு.பரஞ்சோதியும், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது அலுவலகத்துக்கு எதிரே உள்ள மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில் இன்று காலை 8.15 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தனது வாக்கை பதிவு செய்தார்.

ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்த கே.என்.நேருவிடம், உங்களிடம் பழைய சிரிப்பை காணவில்லை, சிரித்துக்கொண்டு போஸ் கொடுங்கள் போட்டோ எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

'இன்னும் 40 நாள் உள்ள இருந்துட்டு வந்தா தான் தெரியும் சிரிக்கிறதப் பத்தி' என்று பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களைப் பார்த்து, வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? என்றார் கே.என்.நேரு. இதற்கு பதில் அளித்த பத்திரிகையாளர்கள், கடந்த தேர்தலில் 7 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தீர்கள். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம், தற்போது அதிமுகவுக்கு எதிராக உள்ளன. எனவே திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றனர்.

தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, கடந்த 10ஆம் தேதி திருச்சியில் கலைஞர், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால் கடலூர் சிறையில் கையெழுத்துப் போட்டுவிட்டு தான் வர வேண்டும் என்று சொன்னதால், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக