திங்கள், 3 அக்டோபர், 2011

வாடகை சைக்கிள் போல எலக்டிரிக் கார் அறிமுகம் France

பாரீஸ் : பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வாடகை சைக்கிள் போல எலக்டிரிக் கார்களில் குறைந்த கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதன்மூலம், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் கார் போக்குவரத்தை குறைக்க முடியும் என்று பிரான்ஸ் அரசு நம்புகிறது.

முதல்கட்டமாக பாரீசில் 66 எலக்டிரிக் கார்கள் வாடகைக்கு தயாராக உள்ளன. அவற்றை சார்ஜ் செய்ய 33 சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையை விரைவில் 3,000 கார்களாகவும் 1,000 சார்ஜிங் மையங்களாகவும் அதிகரிக்க பாரீ மேயர் பெர்ட்ரான்ட் டெலோனே திட்டமிட்டுள்ளார்.
இந்த வாடகை கார் திட்டத்தின்கீழ் எலக்டிரிக் காரை அரை மணி நேரத்துக்கு 4 முதல் 8 யூரோ செலுத்தி பெறலாம். ஆட்டோலிப் எனப்படும் இந்த வசதியை பெற அடையாள அட்டை, முகவரி சான்று அளித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கி.மீ. வரை மற்றும் 4 மணி நேரம் இந்த எலக்டிரிக் கார் ஓடும். ரெனால்ட்ஸ்     மற்றும் அதன் ஜப்பானிய துணை நிறுவனம் நிசான் மோட்டார் ஆகியவை இந்த திட்டத்தில் 400 கோடி யூரோ முதலீடு செய்துள்ளன.

இதுபற்றி ஆட்டோலிப் பொது மேலாளர் மொரல்ட் சிபோட் கூறுகையில், ‘‘ஒரு காரை சொந்தமாக்கி கொள்வதால் அதிக செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு, எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு ஆகியவை ஏற்படுகிறது. அதனால், சொந்தமாக கார் வாங்கும் எண்ணத்தை மக்கள் தவிர்க்க இந்த திட்டம் உதவும். அதேநேரம், கார் குறித்த எந்த கவலையும் இன்றி கார் பயண அனுபவத்தை குறைந்த செலவில் அவர்கள் பெறலாம்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக