புதன், 12 அக்டோபர், 2011

ராமதாஸ்:கலைஞர் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்


மயிலாடுதுறையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்திக்கு ரூ.200 கோடி மதிப்புடைய சொத்துக்களை தாரைவார்த்துக் கொடுத்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
மின் தட்டுப்பாடு காரணமாக பம்பு செட் நம்பி விவசாயம் செய்யும் விவாசயிகள் பாதித்துள்ளார்கள்.
டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உடனடியாக விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயிகளின் பொருளாதார நிலைகருதி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 விலையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்தப்படும். உள்ளாட்சித்தேர்தலில் பாமக போட்டியிடாத இடத்தில் விடுதலை சிறுத்தைக்கட்சி போட்டியிட்டால் ஆதரிப்போம். விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடாத இடத்தில் நியாயமான சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிப்போம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக